/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் விவசாய தோட்டம் துவக்க விழா
/
இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் விவசாய தோட்டம் துவக்க விழா
இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் விவசாய தோட்டம் துவக்க விழா
இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் விவசாய தோட்டம் துவக்க விழா
ADDED : ஜன 09, 2024 01:19 AM

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் பூந்தோட்டம் மற்றும் மாதிரி விவசாய தோட்டம் திறப்பதற்கான துவக்க விழா நடந்தது.
இ.எஸ்., கல்விக்குழுமத் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். இ.எஸ்., கல்லுாரி நிர்வாக இயக்குனர் குப்புசாமி, பொறியியல் கல்லுாரி முதல்வர் இந்திரா, ஏழுமலை தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் ஆமோஸ்ட் ராபர்ட் ஜெயச்சந்திரன், துணை முதல்வர் சங்கர், நுாலகர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
இ.எஸ்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்முருகன் வரவேற்றார். விவசாயி கலியவரதன், தோடக்கலை உதவி இயக்குனர் வெங்கடேசன், மாவட்ட விதை ஆய்வாளர் ஜோதிமணி ஆகியோர் விவசாயத்தின் முக்கியத்துவம், தோட்டம் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல், விவசாயிகளுக்கு அரசு செய்யும் சிறப்பு திட்டம் குறித்து சிறப்புரையாற்றினர். பின், பூந்தோட்டம், விவசாய மாதிரி தோட்டத்தை திறந்து வைத்தனர்.
விழாவில், மாணவ, மாணவிகள் 20 வகையான தோட்ட பயிர் விதைகளை விதைத்து பழமரங்களை நட்டனர்.