/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரங்கபூபதி கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
/
ரங்கபூபதி கல்லுாரியில் வகுப்புகள் துவக்க விழா
ADDED : அக் 05, 2024 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி செவிலியர் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் மாணவர்களுக்கு 2ம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடைகளையும், கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கினார்.
கல்லுாரி முதல்வர் மேனகாகாந்தி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் மாலதி வரவேற்றார். பேராசிரியர்கள் தனலட்சுமி, வினிதா, லாவண்யா, பிரகதீஸ்வரி, மீரா, கிரிஜா பங்கேற்றனர்.