/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான கல்லுாரி சாலை திறப்பு விழா
/
ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான கல்லுாரி சாலை திறப்பு விழா
ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான கல்லுாரி சாலை திறப்பு விழா
ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பிலான கல்லுாரி சாலை திறப்பு விழா
ADDED : அக் 02, 2024 11:46 PM

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் அமைக்ககப்பட்ட கருணாநிதி நுாற்றாண்டு கல்லூரி சாலையினை அமைச்சர் திறந்து வைத்தார்.
திருவெண்ணெய்நல்லூர் ( உளுந்தூர்பேட்டை - சின்னசெவலையில்) வரையில் 3.5 கிலோமீட்டர் தூரம் உள்ள கருணாநிதி நூற்றாண்டு கல்லூரி சாலை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயனன், தி.மு.க..,மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி, மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலர் முரளி, நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் வரவேற்றார். விழாவில் அமைச்சர் பொன்முடி நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் 3.5 கிலோ மீட்டர் துாரம் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு கல்லுாரி சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் இளநிலை உதவியாளர் பாலமுருகன், ஆவின் இயக்குனர் வழக்கறிஞர் விஜயபாபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் விசுவநாதன், முன்னாள் நகர செயலாளர்கள் செல்வம், சிவப்பு செல்வம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.