/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுாரில் மினி டைடல் பார்க் திறப்பு வானுாரில் மினி டைடல் பார்க் திறப்பு

ADDED : பிப் 17, 2024 11:18 PM

வானுார்: வானுாரில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்ட மினி டைடல் பார்க்கை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், மயிலம் சாலையில், தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தனியார் நிறுவனம் மூலம், 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'மினி டைடல் பார்க்' கட்டப்பட்டது.
இதனை, முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
தொடர்ந்து, டைடல் பார்க் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரவிக்குமார் எம்.பி., லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பழனி, குத்துவிளக்கேற்றி பேசுகையில், 'நான்கு தளங்களுடன் 63 ஆயிரம் சதுரடி பரப்பளவில் மினி டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தில் 450 முதல் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் பாதுகாப்பு உட்பட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளன.
இந்த மினி டைடல் பார்க் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும்' என்றார்.