/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எம்.வி.தோல் சிகிச்சை மையம் திறப்பு விழா
/
எம்.வி.தோல் சிகிச்சை மையம் திறப்பு விழா
ADDED : நவ 08, 2024 11:03 PM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே கமல் நகரில் எம்.வி.நவீன தோல் சிகிச்சை மைய திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் ரமாதேவி குத்து விளக்கேற்றினார். மருதம் ஒருங்கிணைப்பாளர் ரவி கார்த்திகேயன், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் வெங்கேடேசன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் முன்னிலை வகித்தனர். வரதராஜன், மகேஸ்வரி வரவேற்றனர்.
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கல்விக் குழும தலைவர் மற்றும் தட்சசீலா பல்கலைக் கழக வேந்தர் தனசேகரன், மையத்தை திறந்து வைத்தார். வளவனுார் ராகவேந்திரர் கோவில் நிறுவனர் சங்கரலிங்கம், மருந்தகத்தை திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் வாசகர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி முதன்மை உதவி பேராசிரியர் இளையராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மருத்துவ ஆலோசகர் டாக்டர் அரிஹரசுதன் நன்றி கூறினார்.
திறப்பு விழாவை முன்னிட்டு, மையத்தில், நாளை 10ம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என நிர்வாகி வரதராஜன் தெரிவித்தார்.