/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா
/
மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா
ADDED : மார் 14, 2024 11:21 PM

கண்டமங்கலம்: பள்ளிப்புதுப்பட்டு ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா நடந்தது.
பள்ளிப்புதுப்பட்டு ஊராட்சியில் 8 லட்சம் ரூபாய் செலவில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, 1.57 லட்சம் செலவில் பம்ப் ஹவுஸ் மற்றும் 1.50 லட்சம் செலவில் கிராம நிர்வாக அலுவலருக்கான கழிவறை கட்டடம் கட்டப்பட்டது.
இதன், திறப்பு விழாவிற்கு, ஊராட்சி தலைவர் நதியா சுரேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் பிரசாத் முன்னிலை வகித்தனர். பி.டி.ஒ., ராமு வரவேற்றார்.
ஒன்றிய சேர்மன் வாசன் நீர் தேக்கத்தொட்டியை திறந்து வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் செல்வமணி, அவைத் தலைவர் மோகன்தாஸ், வி.ஏ.ஓ., மலைவாசன், ஊராட்சி செயலர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

