ADDED : மார் 18, 2024 03:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் :  சின்ன கொழுவாரி ஊராட்சியில், 28 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினர் ரவிக்குமார் எம்.பி.,  சக்கரபாணி எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் உஷா முரளி ஆகியோர் கட்டடத்தை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் பிரேமா குப்புசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜவேலு, ஊராட்சி தலைவர் சம்பந்தம், வானுார் பி.டிஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டுரங்கன், ரேணுகாதேவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சம்மணசூமேரி, உதவி ஆசிரியர் ராஜசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

