ADDED : ஜூன் 19, 2025 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் அருகே கருவம்பாக்கத்தில் உள்ள தரம்சந்த் ஜெயின் சி.பி.எஸ்.இ., பள்ளியில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தரம் கல்வி குழுமத்தை உருவாக்கிய முன்னாள் எம்.பி. ஹீராச்சந்த்தின் நினைவு நாளை முன்னிட்டு, நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் பப்ளாசா தலைமை தாங்கினார். முதல்வர் சாந்தி பாலச்சந்தர் முன்னிலை வகித்தார்.
விழாவில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
பள்ளி செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவீன்குமார், நிர்வாக இயக்குநர் அனுராக் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.