/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை
/
பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை
பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை
பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : அக் 27, 2024 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : ராமையன்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் அடுத்த ராமையன்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 2024-25ம் தணிக்கை ஆண்டின், முதல் அரையாண்டில் சங்கம் ஈட்டியுள்ள நிகர லாப தொகையில், 70 சதவீத தொகையான 1.12 லட்சம் ரூபாய் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் 88 பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு, கலெக்டர் பழனி ஊக்க தொகையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில், துணைப்பதிவாளர் (பால் வளம்) ஸ்ரீகலா, பொது மேலாளர் ராஜேஷ் பங்கேற்றனர்.