/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருமான வரித்துறையினர் ஆலோசனை கூட்டம்
/
வருமான வரித்துறையினர் ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 23, 2025 04:52 AM

விழுப்புரம் : விழுப்புரம் வருமான வரித்துறை அலுவலகத்தில், தொழிற்சங்கங்களின் சார்பில் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் தொடர்பான விளக்கவுரை கூட்டம் நடந்தது.
வருமான வரித்துறை ஊழியர் சம்மேளன கிளைத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூடுதல் செயலாளர் மதன்குமார், பொருளாளர் நரசிம்மன், அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினர்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிர்வாகிகள் பெர்லின், ஷபீர் அகமது, மண்டல செயலாளர் கோவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர். கிளை பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.