ADDED : டிச 16, 2025 05:16 AM

வி ழுப்புரம் மாவட்டத்தில் போஸ்டர் கலாசாரம் அதிகரித்துள்ளதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் தற்போது டிஜிட்டல் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது டிஜிட்டல் பேனருக்கு மாறாக, போஸ்டர் கலாசாரம் அதிகரித்துவிட்டது.
பிறந்தநாள், திருமண வாழ்த்து, அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகை உள்ளிட்டவைகளுக்காக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலக கட்டடம், பெருந்திட்ட வளாக சுற்றுசுவர், சாலையின் சென்டர் மீடியன்கள், அரசு சுவர்கள் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
எனவே, மாவட்டத்தில் அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

