
மயிலம்: மயிலம் அடுத்த உள்ள ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
விழாவிற்கு, அரிமா சங்க நிர்வாகி குமரகுரு ஏழுமலை தலைமை தாங்கினார். ராஜன் சிங், குருமூர்த்தி, ரமேஷ், தண்டபாணி முன்னிலை வகித்தனர். பாபு வரவேற்றார். மாவட்ட முன்னாள் ஆளுநர் முரளி ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசினார். மாணவ, மாணவிகளின் சார்பில் 278 மீட்டர் தேசியக் கொடியை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
ஹோலி ஏஞ்சல் கல்வி குழும தலைவர் பழனியப்பன், வழக்கறிஞர் செந்தில்குமார், முதுநிலை முதல்வர் அகிலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
செஞ்சி செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி செயலாளர் தாட்சாயனி வேல்முருகன் தேசிய கொடியேற்றினார். முதல்வர் சேகர் வரவேற்றார். மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, உடற்பயிற்சி, கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதுகலை ஆசிரியர்கள் மீனாட்சி, சுஜாதா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் கவுசல்யா கொடியேற்றினார். தொடர்ந்து மாணவர்களின் நாட்டுப்பற்று விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தது. சிந்துார் வெற்றி நாடகம் நடந்தினர். பி.டி.ஓ., முன்னாள் தலைவர் சின்னராசு பேசினார். பள்ளி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.
திண்டிவனம் திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். முதல்வர் அருள்மொழி வரவேற்றார். மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. ஆசிரியை ஷாலினி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் பரத் நன்றி கூறினார்.
இதேபோல் மரகதாம்பிகை உயர்நிலைப் பள்ளியில் சாணக்யா கல்வி குழும தலைவர் தேவராஜ் கொடியேற்றினார். தலைமையசிரியர் பத்மாவதி, ேஹாஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் சுகுமார், நிர்வாகிகள் கார்த்திக், புஷ்பராஜ், பாலாஜி பங்கேற்றனர்.