/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் இன்று சுதந்திர தினவிழா
/
விழுப்புரத்தில் இன்று சுதந்திர தினவிழா
ADDED : ஆக 14, 2025 11:40 PM

விழுப்புரம்: மாவட்டத்தில், நாட்டின் 79வது சுதந்திர தின விழா இன்று காலை நடக்கிறது. விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கும் விழாவில், காலை 9:05 மணிக்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தேசிய கொடி ஏற்றி வைத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார்.
இந்த விழாவில், அரசு துறையினருக்கு நற்சான்றிதழ்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
போலீசார் ஒத்திகை மாவட்ட நிர்வாகம் சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, சுதந்திர தின விழாவுக்காக, நேற்று காலை 9:00 மணிக்கு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ஆயுதப்படை டி.எஸ்.பி., ஞானவேல் தலைமையில், போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. எஸ்.பி., சரவணன் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தார்.