/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் போக்குவரத்து இல்லாத இடத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஏற்பாடு
/
பஸ் போக்குவரத்து இல்லாத இடத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஏற்பாடு
பஸ் போக்குவரத்து இல்லாத இடத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஏற்பாடு
பஸ் போக்குவரத்து இல்லாத இடத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஏற்பாடு
ADDED : ஆக 14, 2025 11:46 PM
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா மாற்றப்பட்டதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக் டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில், ஆண்டுதோறும் சுதந்திர தின விழா நடைபெற்று வந்தது.
இந்தாண்டு, விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா நடக்கிறது.
இது குறித்து மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியை நடத்தினால், மைதானம் தர உயர வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித் தனர்.
அதே நேரத்தில், விழா நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சென்று வர பஸ் வசதி முற்றிலும் கிடையாது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானம், புதிய பஸ் நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இங்கு தொடர்ந்து விழாவை நடத்தினால், மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி வந்து செல்வர்.
பெற்றோர் மற்றும் பொதுமக்களும் சுதந்திர தின விழாவில் அதிகளவில் பங்கேற்க முடியும்.
மாவட்ட விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தும் அதிகாரிகளின் நோக்கம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த பிரச்னைக்கு மாற்றாக, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரம்மாண்டமான நகராட்சி திடலில், நவீன கலையரங்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் அங்கு அரசு நிகழ்ச்சிகளை நடத்தினால், அனைத்து தரப்பினரும் பங்கேற்பதற்கு வசதியாக இருக்கும் என, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர்-