/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்திய அளவில் சிலம்பம் போட்டி: ஆலிவ்ட்ரீ பள்ளி மாணவர் சாதனை
/
இந்திய அளவில் சிலம்பம் போட்டி: ஆலிவ்ட்ரீ பள்ளி மாணவர் சாதனை
இந்திய அளவில் சிலம்பம் போட்டி: ஆலிவ்ட்ரீ பள்ளி மாணவர் சாதனை
இந்திய அளவில் சிலம்பம் போட்டி: ஆலிவ்ட்ரீ பள்ளி மாணவர் சாதனை
ADDED : ஜன 06, 2026 03:26 AM

விழுப்புரம்: ஆலிவ்ட்ரீ மெட்ரிக் பள்ளி மாணவன், அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.
விழுப்புரம் அடுத்த அன்னியூர் ஆலிவ்ட்ரீ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் தர்ஷன்குமார். இவர், மத்திய பிரதேசம் உஜ்ஜையினியில் நடந்த அகில இந்திய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றார். இதில், அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
சாதனை படைத்த மாணவர் தர்ஷன்குமார் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராஜகோபாலன், பள்ளி பயிற்சியாளர் சுரேஷ் ஆகியோரை, பள்ளி நிர்வாகி நடராஜன், தாளாளர் இளம்பரிதி, முதல்வர் தவமணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.