ADDED : டிச 27, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர், ; இந்திய கம்யூ., நூற்றாண்டை முன்னிட்டு, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய கம்யூ., நூற்றாண்டு துவக்க விழா மற்றும் சுதந்திர போராட்ட வீரர் நல்லக்கண்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டும் இந்திய கம்யூ., வானூர் வட்டத்தின் சார்பில் கொடியேற்று விழா நடந்தது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, கிளை செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் நடராஜன், அசேன் பாஷா, சீத்தாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக்குழு உறுப்பினர் இமயம் சேகர் கட்சி கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சகாபுதீன் சிறப்புரையாற்றினார்.
விழாவையொட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

