ADDED : ஜன 10, 2026 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் இந்திய கம்யூ., சார்பில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் காணாமல் போனதை தேடும் போராட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, வட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுமுகம், நகர செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சவுரிராஜன் போராட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினர்.
மாவட்ட துணைச் செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன், வட்ட துணைச் செயலாளர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

