/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
/
தொழில் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஏப் 08, 2025 04:30 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கட்டுமான மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். செயலாளர்கள் செல்வராஜ், அன்பழகன், அவை தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
மாநில பொருளாளர் ஜெகதீஷ் உட்பட கடலுார் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் பகுதியில் நத்தம் பட்டா ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுவதால், இதில் பிரச்னைகளை களைய கலெக்டர் உரிய தீர்வு காண வேண்டும். பத்திர பதிவில் உள்ள தடையை நீக்க தனி தாசில்தார் அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

