/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மானியத்தில் பழ மரக்கன்று தொகுப்பு வினியோகம் உதவி இயக்குனர் தகவல்
/
மானியத்தில் பழ மரக்கன்று தொகுப்பு வினியோகம் உதவி இயக்குனர் தகவல்
மானியத்தில் பழ மரக்கன்று தொகுப்பு வினியோகம் உதவி இயக்குனர் தகவல்
மானியத்தில் பழ மரக்கன்று தொகுப்பு வினியோகம் உதவி இயக்குனர் தகவல்
ADDED : ஜூன் 28, 2025 12:58 AM
விக்கிரவாண்டி : விவசாயிகளுக்கு மான்யத்தில் பழ மரக்கன்று தொகுப்புகள் வினியோகம் நடப்பதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெய்சன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுதோறும் 5 பழ மற்றும் தென்னை மரக்கன்றுகள் விக்கிரவாண்டி வட்டாரத்தில் தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது. தேர்தெடுக்கப்பட்ட கிராமங்களான எசாலம், நந்திவாடி, வி.சாத்தனுார், உலகலாம் பூண்டி, வி.சாலை, பகண்டை, தென்னவராயன்பட்டு, கப்பியாம்புலியூர், மேலக்கொந்தை, சின்னதச்சூர் ஆகிய இடங்களில் ரூபாய் 150 மான்யத்தில் மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, பலா உள்ளிட்ட பழ மரக்கன்றுகள் தொகுப்பும், ரூ. 65 மான்யத்தில் தென்னங்கன்றுகளும் வழங்கப்படுகிறது.
பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூபாய் 7500 மான்யத்தில், வெண்டை விதைகளும், பல்லாண்டு பழ பயிர்களான மா, பலா, கொய்யா கன்றுகள் ஹெக்டேருக்கு ரூபாய் 18000 மான்யத்தில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் உழவன் செயலியில் முன் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு உதவி இயக்குனர் ஜெய்சன் தெரிவித்துள்ளார்.