/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொறியியல் கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி வகுப்பு
/
பொறியியல் கல்லுாரியில் புத்தாக்க பயிற்சி வகுப்பு
ADDED : ஜன 02, 2025 06:57 AM

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் அனைத்து துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சியின் துவக்க விழாவிற்கு, மயிலம் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர்.
புத்தாக்க பயிற்சியாளர் பெங்களூருவை சேர்ந்த வின் யூவர் வீக்னஸ் நிறுவன தலைவர் ஜெகன், மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் எளிய முறையில் செயல்விளக்கத்தோடு சிறப்புரையாற்றினார். கல்லுாரியில் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழிகள் பற்றியும் கூறினார்.
முன்னதாக, கல்விக்குழுமம் இயக்குனர் செந்தில் வரவேற்றார். முதல்வர் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார். இந்த பயிற்சியில் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் முனைவர் சுந்தரமூர்த்தி, துணை பேராசிரியர் பாலாஜி ஆகியோர் செய்தனர்.

