ADDED : செப் 03, 2025 07:22 AM

விழுப்புரம், : விழுப்புரம் - திருவண்ணாமலை ரயில்வே மார்க்கத்தில் உள்ள பயணிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக, தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அலுவலர் லலித்குமார், திருச்சி கோட்ட ரயில்வே துணை மேலாளர் செல்வன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த மார்க்கத்தில் உள்ள தண்டவாள இணைப்புகள், பாயிண்ட் மாற்றும் பகுதி, சுரங்கபாலம், மேம்பாலம் ஆகிய பகுதிகள் மட்டுமின்றி சிறப்பு ரயில் மூலம் இந்த தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடந்தது.
தொடர்ந்து, விழுப்புரம் - புதுச்சேரி ரயில்வே மார்க்கம் மற்றும் ரயில் நிலையங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
விழுப்புரம் - திருவண்ணாமலை மார்க்கங்களில் 40; புதுச்சேரி மார்க்கத்தில் உள்ள 28; ரயில்வே கேட்களில் ஊழியர்களின் பணி விபரம் மற்றும் கேட்கள் முறையாக இயங்குகிறதா எனஆய்வு செய்தனர்.
விழுப்புரம் ரயில்வே ஓட்டுனர்களின் ஓய்வு அறை யின் பராமரிப்பு நிலைகளை ஆய்வு செய்தனர். இதில், முதன்மை பொறியாளர் ரவிமிட்டல், மெக்கானிக் பிரிவு முதன்மை பொறியாளர் பரணபாஸ்கர், திருச்சி கோட்ட முதன்மை பாதுகாப்பு அலுவலர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.