/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் திட்ட பணிகள் இணை இயக்குனர் ஆய்வு
/
வேளாண் திட்ட பணிகள் இணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஜூலை 10, 2025 02:44 AM

செஞ்சி : செஞ்சி அருகே, வேளாண் திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடந்தது.
வல்லம் வட்டாரத்தில் நடந்த வேளாண் பணிகளை இணை இயக்குனர் சீனிவாசன் ஆய்வு செய்தார். அப்போது அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு ஊட்டச்சத்துகள் பயறு வகைகள், சிறுதானியங்கள் இயக்கம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
மேல் சித்தாமூர் கிராமத்தில் குறுவே சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் இயந்திர நெல் நடவு பணிகளை ஆய்வு செய்து, அங்கிருந்த விவசாயிகளிடம் இயந்திர நெல் நடவின் அவசியம் குறித்தும் அதற்கு ஏக்கருக்கு ரூபாய் 4,000 ரூபாய் வீதம் அரசு வழங்கும் மானியம் குறித்தும், 50 சதவீத மானியத்தில் விதைகள், நுண்ணுரங்கள், உயிர் உரங்கள் வழங்கப்பட்டு வருவதையும் எடுத்துக் கூறினார்.
வல்லம் வேளாண் விரிவாக்கம் மையத்தில் இடுபொருட்கள் இருப்பினை ஆய்வு செய்தார். விவசாயிகளுக்கு, 50 சதவீத மானிய விலையில் தக்கை பூண்டு விதைகளை வழங்கினார்.
ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குனர் சரவணன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திர போஸ், துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜூ, உதவி வேளாண் அலுவலர்கள் தமிழரசி, மஞ்சு, ஜீவா, அபிராமி, வாசமூர்த்தி, பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.