/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அனைத்து துறை திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
அனைத்து துறை திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அனைத்து துறை திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அனைத்து துறை திட்ட பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : ஜூலை 18, 2025 05:01 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து துறை திட்ட பணிகள் குறித்து மாவட்ட அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமை தாங்கினார்.
இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாநில நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தும் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
திண்டிவனம் பஸ் ஸ்டாண்டு, சிட்கோ மருந்தியல் பூங்கா உட்பட சுகாதாரம், கல்வி துறை, நகராட்சி சார்ந்த பணிகளின் முன்னேற்றமும் கேட்டறிந்ததோடு, இந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மாவட்டத்தில், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் தற்போதுள்ள சாலைகளின் நிலை பற்றியும், புதிய சாலை பணிகள், துவங்கப்படவுள்ள சாலை பணிகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிய விபரம் பற்றியும், நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், உயர்மட்ட பாலம் பணிகளின் முன்னேற்றம் பற்றி கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
இதில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.