/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நந்தன் கால்வாயில் தூர் வாரும் பணி ஆய்வு
/
நந்தன் கால்வாயில் தூர் வாரும் பணி ஆய்வு
ADDED : ஆக 07, 2025 02:50 AM

செஞ்சி: நந்தன் கால்வாயில் துார்வாரும் பணியை நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சல் ஆற்றில் இருந்து விழுப்புரம் மாவட்டம் பனமலை ஏரிக்கு தண்ணீர் வரும் நந்தன் கால்வாயில் சோ.குப்பம்-தேவதானம்பேட்டை இடையில் உள்ள வனப்பகுதியில் 'பெஞ்சல்' புயலினால் மண் சரிந்து பல இடங்களில் கால்வாய் துார்ந்து போய் உள்ளது.
இதையடுத்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் மாவட்ட நிர்வாகம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், என்.டி.எஸ்.ஓ., நம்மால் முடியும், எம்.என் காயத்ரி சார்டிஸ் ஆகிய தன்னார்வ அமைப்புகளும் இணைந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணிகளை விழுப்புரம் நிர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி ஆய்வு செய்தார். அடுத்து பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது திண்டிவனம், உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், செஞ்சி பொறியாளர் சத்யா, களப்பணியாளர் செல்வராஜ், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் சேகர், செயலாளர் ரமேஷ் பாபு, களப்பணியாளர் சந்தானம் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.