/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுக்குள் வைக்க அறிவுறுத்தல்
/
பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுக்குள் வைக்க அறிவுறுத்தல்
பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுக்குள் வைக்க அறிவுறுத்தல்
பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுக்குள் வைக்க அறிவுறுத்தல்
ADDED : செப் 05, 2025 07:56 AM
விழுப்புரம்; மாவட்டத்தில் பூச்சிக்கொல்லியை பயன்படுத்தும் போது மருந்து அளவை கட்டுக்குள் வைத்து பயன்படுத்துவது அவசியம் என தோட்டக்கலை துணை இயக்குநர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
விவசாயத்தில் பூச்சிக்கொல்லி பயன்படுத்தும் போது அதன் அளவை கட்டுக்குள் வைத்து பயன்படுத்துவது அவசியம். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை பூச்சிகளின் வளர்ச்சி பரவலை தொடர்ந்து கண்காணிப்பது, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை பயன்படுத்தி, மண், நீர், காற்று மாசுபடுவதை தவிர்க்க வேண்டும்.
டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், பெசிலியோமைசிஸ் ஆகிய உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள், இயற்கை பூச்சி விரட்டிகள் மூலம் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
பயிர் சுழற்சி, கலப்பின பயிர்கள், மண்புழு உரம், தொழு உரம், பஞ்சகாவ்யா, தசகாவ்யா, மீன் அமிலத்தை பயன்படுத்தலாம்.
மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், ஒரு எக்டருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள், இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு ரூ.1,775 மதிப்பிலான மஞ்சம் ஒட்டும் பொறி, ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.