/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்நாடு கிராம வங்கியில் காப்பீட்டு நிதி வழங்கல்
/
தமிழ்நாடு கிராம வங்கியில் காப்பீட்டு நிதி வழங்கல்
ADDED : ஜன 09, 2025 06:56 AM

திருவெண்ணெய்நல்லுார்: சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழ்நாடு கிராம வங்கியில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 47; இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழ்நாடு கிராம வங்கியில் சேமிப்பு கணக்கும் வங்கியில் செயல்பட்டு வந்த பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த வெங்கடேசன் குடும்பத்தினருக்கு நேற்று வங்கி மேலாளர் ராஜேஷ் குமார் தலைமையில் 2 லட்சம் ரூபாய் காப்பீட்டு நிதி வழங்கப்பட்டது.
காசாளர்கள் யோகேஸ்வரன், சிவரஞ்சனி மற்றும் உதவி மேலாளர் ஜெயந்தி மற்றும் அலுவலக உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

