/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதியோர், விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்ட முகாம்
/
முதியோர், விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்ட முகாம்
முதியோர், விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்ட முகாம்
முதியோர், விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்ட முகாம்
ADDED : மார் 05, 2024 05:14 AM

வானுார்: வானுார் தாலுகா அளவில் முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஒருங்கிணைப்பு திட்டம் தொடர்பான முகாம் நடந்தது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த முகாமை ஒன்றிய சேர்மன் உஷா துவக்கி வைத்தார். வானுார் பி.டி.ஓ., தேவதாஸ், கிளியனுார் வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் ஜெயப்பிரகாஷ், பாலசுப்ரமணியன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார இயக்க ராஜலட்சுமி (மகளிர் திட்டம்) வரவேற்றார்.
முகாமில், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை பெறுவதற்கான படிவங்களை வழங்கினர். வட்டார ஒருங்கிணைப்பாளர் (மகளிர் திட்டம்) ராதிகா நன்றி கூறினார்.