முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி ஏற்பாடுகள் தீவிரம் : பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 78 ஆயிரம் பேர் பங்கேற்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி ஏற்பாடுகள் தீவிரம் : பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 78 ஆயிரம் பேர் பங்கேற்பு
UPDATED : செப் 03, 2026 08:43 PM
ADDED : செப் 03, 2026 08:04 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு நடக்க உள்ள, முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில், பங்கேற்க, 78 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும், 9ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடக்கிறது.
மொத்தம், 256 பிரிவுகளில் நடக்க உள்ள இந்த போட்டிகளில் பங்கேற்க, மாணவர்கள், அரசு அலுவலர்கள் என மொத்தம், 78 ஆயிரம் பேர், இணைய வழியில் ஆர்வத்தோடு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில், இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முக்கிய போட்டிகளுக்கான தேதி மற்றும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கூடைபந்து போட்டி, வரும் 9, 10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 11ம் தேதி பள்ளி மாணவிகளுக்கும், 15,16ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கும், 17ம் தேதி கல்லுாரி மாணவிகளுக்கும், விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது.
கபடி போட்டி வரும், 9,10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 11,12ம் தேதி பள்ளி மாணவிகளுக்கும், 15,16ம் தேதி கல்லுாரி மாணவர்களுக்கும், 17,18ம் தேதி கல்லுாரி மாணவிகளுக்கும், 21,22ம் தேதி பொது பிரிவினர் ஆண்களுக்கும், 23,24ம் தேதி பொது பிரிவு பெண்களுக்கும், 26ம் தேதி அரசு ஊழியர் ஆண்கள், பெண்களுக்கும், 25ம் தேதி மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும், விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது.
கையுந்து பந்து போட்டி, வரும் 9,10ம் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 11,12ம் தேதி பள்ளி மாணவிகளுக்கும், 15,16ம் தேதி கல்லுாரி மாணவர்களுக்கும், 17,18ல் கல்லுாரி மாணவிகளுக்கும், 21,22ல் பொது பிரிவு ஆண்களுக்கும், 23,24ல் பொது பிரிவு பெண்களுக்கும், 26ல் அரசு ஊழியர்களுக்கும், 25ல் மாற்றுத்திறனாளிகளுக்கும் நடக்கிறது.
கால்பந்து போட்டி வரும், 12ம் தேதி பள்ளி மாணவர்களுக்கும், 15ம் தேதி மாணவிகளுக்கும், 18,19 கல்லுாரி மாணவர்களுக்கும், 23ல் மாணவிகளுக்கும், பொது பிரிவு பெண்களுக்கும், 24ம் தேதி பொது பிரிவு ஆண்களுக்கும் நடக்கிறது.
தடகள போட்டி வரும், 9ம்தேதி பள்ளி மாணவர்களுக்கும், 10ம் தேதி பள்ளி மாணவிகள், கல்லுாரி மாணவிகளுக்கும், 16ல் கல்லுாரி மாணவர்களுக்கும், 21ல் பொது பிரிவு ஆண்களுக்கும், 26ல் பொதுபிரிவு பெண்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வரும், 25ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும் நடக்கிறது.
கிரிக்கெட் போட்டி, 10ம் முதல் 24ம் தேதி வரை, அரசூர் வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் நடக்கிறது. சிலம்பம் வரும், 9ம்தேதி முதுல் 26ம் தேதி வரை, விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. நீச்சல் போட்டியானது, 10 முதல் 16ம் தேதி வரை, விழுப்புரம் அரசு நீச்சல் குளத்தில் நடைபெற உள்ளது.
இறகுப்பந்து போட்டி, 10 முதல் 26ம் தேதி வரை, பெருந்திட்ட வளாக உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
கேரம் போட்டி, 10 முதல் 26ம் தேதி வரை, வி.மருதுார் ஜான்டூயி பள்ளியில் நடைபெற உள்ளது. செஸ் போட்டியானது, 10 முதல் 16ம் தேதி வரை, விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரியில் நடக்கிறது. ஹாக்கி போட்டியானது, 11 முதல் 16 வரை மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது. மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
