/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கலை கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
/
அரசு கலை கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
ADDED : அக் 31, 2025 02:27 AM

விழுப்புரம்:  அரசு கலைக்கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், 'பொது கொள்கையும், நிர்வாக திறனில் தற்போதைய நிலையும்' எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடை பெற்றது. வணிகவியல் துறை, இந்திய பொது நிர்வாக நிறுவனம் இணைந்து நடத்திய கருத்தரங்கிற்கு, முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் பாண்டியன் வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் கனகசபாபதி, பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் அறிமுக உரையாற்றினர்.
பொறியாளர் கண்ணதாசன், கடலுார் அரசு கலை கல்லுாரி இணை பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர், சிறப்புரையாற்றினர்.
இதில், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் , ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை, இளங்கலை மாணவர்கள் பலர் கலந்து கொண்டு, தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.
பேராசிரியை ருக்மணி நன்றி கூறினார்.

