/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேக்ரட் ஹார்ட் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
/
சேக்ரட் ஹார்ட் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
சேக்ரட் ஹார்ட் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
சேக்ரட் ஹார்ட் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
ADDED : ஏப் 01, 2025 04:38 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பேரணி சேக்ரட் ஹார்ட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதுகலை கணினி அறிவியல் துறை இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
ஓமன் நாட்டை சேர்ந்த பேராசிரியர் ஜெகன் முருகதாஸ், 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில் பயிற்றுவித்தல்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கல்லுாரி செயலாளர் பிரிட்டோ, சேக்ரட் ஹார்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மங்கலம் வாழ்த்திப்பேசினார்.
முதல்வர் டேவிட் சவுந்தர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியை ஜெயலட்சுமி, செயற்கை நுண்ணறிவு ஆர்வத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என பேசினார்.
திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் பேராசிரியர் மார்டின், செயற்கை நுண்ணறிவு புரட்சி மற்றும் புத்திசாலிதனமான சமூகம், சுகாதாரம், வணிகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு போகும் முறைகள் குறித்து பேசினார். பேராசிரியர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.
தலைமை நிர்வாக அதிகாரி சங்கீதா நன்றி கூறினார். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், முதுகலை, இளங்கலை மாணவர்கள் பங்கேற்றனர்.

