ADDED : அக் 19, 2025 02:57 AM

மரக்காணம்: மயிலம் பொம்பபுர ஆதீனம் 19ம் பட்டம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் நுாற்றாண்டு விழா பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்தது.
மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லுாரி, புதுச்சேரி பல்கலைக் கழகம் சுப்ரமணிய பாரதியார் தமிழியர் புலம் சார்பில் புதுச்சேரி பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் நடந்த கருத்தரங்கிற்கு, மயிலம் பொம்பபுரம் 20ம் பட்ட ஆதீனம் ஸ்ரீசிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார்.
மயிலம் தமிழ் கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். ராமலிங்கம் முன்னிலை வகித்தார். புதுச்சேரி பல்கலைக் கழக இயக்குநர் மற்றும் பேராசிரியர் கிளமண்ட் சகாயராஜ் லுார்து, ேகப்டன் ராஜிவ்குமார் ராஜேந்திரன், புலவர் ஆதிகேசவன், சுடலைமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நுாற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டு, குன்றக்குடி அடிகளார், பாலமுருகன் அடிமை சுவாமிகள், ஆசியுரை வழங்கினார். புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் சிறப்புரையாற்றினார்.
சுப்ரமணிய பாரதியார் தமிழியர்புலம் துணைத் தலைவர் பேராசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்.