/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்வதேச டேக்வாண்டோ: மாணவர்கள் சாதனை
/
சர்வதேச டேக்வாண்டோ: மாணவர்கள் சாதனை
ADDED : அக் 05, 2024 04:06 AM

விழுப்புரம் : சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில் விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டி கோவாவில் கடந்த 28ம் தேதி நடந்தது. போட்டியில், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், எத்தியோபியா, மலேசியா, சிங்கப்பூர், நேபாளம் ஆகிய 7 நாடுகளை வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், இந்தியா சார்பில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டேக்வாண்டோ வாரியர் கிளப் சார்பில் 10 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், நிவேதிதா, அட்சய் ஸ்டான்லி ஆகியோர் தங்கமும், பூஜாஸ்ரீ, பிருத்விராஜ் ஆகியோர் வெள்ளியும், புனிதா, சர்வேஷ்வர் வெண்கலம் வென்று சாதித்துள்ளனர்.
சாதனை மாணவ, மாணவிகளை பயிற்சியாளர்கள் பால கணேசன், ஜெகதீஸ்வரன் ஆகியோரை டேக்வாண்டா வாரியர் கிளப் நிர்வாகிகள் பாராட்டினர்.