sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தட்சசீலா பல்கலைக்கழகத்தில் சர்வதேச திருக்குறள் மாநாடு

/

 தட்சசீலா பல்கலைக்கழகத்தில் சர்வதேச திருக்குறள் மாநாடு

 தட்சசீலா பல்கலைக்கழகத்தில் சர்வதேச திருக்குறள் மாநாடு

 தட்சசீலா பல்கலைக்கழகத்தில் சர்வதேச திருக்குறள் மாநாடு

1


ADDED : பிப் 15, 2026 05:21 AM

Google News

ADDED : பிப் 15, 2026 05:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திண்டிவனம், ஓங்கூர் தட்சசீலா பல்கலைக்கழகம் சார்பில் 'திருக்குறள் - உலக மாற்றத்திற்கான நிலையான சான்றாண்மை' தலைப்பில் இரு நாள் சர்வதேச மாநாடு நடந்தது.

துவக்க நிகழ்ச்சிக்கு, தட்சசீலா பல்கலைக் கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். இணை வேந்தர்கள் ராஜராஜன், நிலா பிரியதர்ஷினி முன்னிலை வகித்தனர். முன்னதாக, மனிதவியல் புல முதன்மையர் தீபா வரவேற்றார்.

துணைவேந்தர் விவேக் இந்தர் கோச்சா, இந்திய பண்பாட்டையும், பாரம்பரியத்தின் பெருமைகளையும் கூறினார்.

முதல் நாள் மாநாட்டில், தென்கொரியா தமிழ் ஆய்வாளர் சங்கத் தலைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், திருக்குறள் முக்கியத்துவம் குறித்து தன்னைப் போன்ற பிற துறை வல்லுநர்களும் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இரண்டாம் நாள் இணையவழி மாநாட்டு நிகழ்வில், மதுரை திருக்குறள் மன்ற செயலாளர் அழகுராஜ், கல்வியின் சிறப்பு குறித்து பேசினார்.

சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் ரத்தின வெங்கடேசன் சொற்பொழிவாற்றினார்.

மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள் 200க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வழங்கினர்.

இணைப்பதிவாளர் ராமலிங்கம், அகாடமிக் டீன் சுப்ரமணியன், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறை டீன் சுபலட்சுமி, மருத்துவ புலங்களின் டீன் ஜெயஸ்ரீ உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us