நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் யோகா சங்கம் சார்பில் 2வது சர்வதேச தியானம் தின விழா நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தலைவர் ராமமூர்த்தி தியான உரை நிகழ்த்தினார்.
ராமகிருஷ்ணா மிஷன் செயலர் ஸ்ரீமத் சுவாமி பரசுகானந்தஜி மகராஜ் சிறப்புரையாற்றினார்.
இதில், ஈஷா மையம் ஆனந்தமூர்த்தி, உடல் தியானம் பற்றியும், தியான பயிற்றுநர்கள் ஆனந்தபாபு, புவனேஸ்வரி ஆகியோர் உயிர் தியானம் பற்றியும், மனவளக்கலை மன்றம் சமுத்திரகனி மன தியானமும், பிரம்மகுமாரிகள் ராஜயோக மையம் ராஜயோகினி அம்புஜம் இறை தியானம் பற்றி சொற்பொழிவு ஆற்றினர்.

