/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொருளில்லா ரேஷன் கார்டு கலெக்டர் அறிவுறுத்தல்
/
பொருளில்லா ரேஷன் கார்டு கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 23, 2025 01:52 AM
விழுப்புரம் : அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லாத ரேஷன் கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக் குறிப்பு;
உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பொது வினியோகத்திட்ட ஆய்வுக் கூட்டத்தில், ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத ரேஷன் கார்டுதாரர்கள் அவர்களது உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லாத ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் உரிமத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் ரேஷன் கார்டை பொருளில்லா கார்டாக மாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.