/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் மீது விசாரணை
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மனுக்கள் மீது விசாரணை
ADDED : ஜூலை 29, 2025 07:15 AM

விக்கிரவாண்டி :  விக்கிரவாண்டி ஒன்றியத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது சமூக நல தாசில்தார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் வி.சாலை, அடைக்கலாபுரம், கொங்கராம்பூண்டி, சிந்தாமணி, வடகுச்சிபாளையம், முண்டியம்பாக்கம், அய்யூர் அகரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகளில் நடந்த முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை, ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சமூக நல தனி தாசில்தார் வேல் முருகன் கிராமங்களில் நேரில் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.வருவாய் ஆய்வாளர் தமிழரசன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பத்மநாபன், வி.ஏ.ஓ., ஸ்ரீதர், கிராம உதவியாளர்கள் ரமேஷ் , சதீஷ் அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

