sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 வம்சாவழி சார்பில் இல்லா வாக்காளர்கள் குறித்து விசாரணை: கலெக்டர் ஆய்வு

/

 வம்சாவழி சார்பில் இல்லா வாக்காளர்கள் குறித்து விசாரணை: கலெக்டர் ஆய்வு

 வம்சாவழி சார்பில் இல்லா வாக்காளர்கள் குறித்து விசாரணை: கலெக்டர் ஆய்வு

 வம்சாவழி சார்பில் இல்லா வாக்காளர்கள் குறித்து விசாரணை: கலெக்டர் ஆய்வு


ADDED : ஜன 07, 2026 05:52 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் வம்சாவழி சார்பில் இல்லா வாக்காளர்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வழுதாவூர், நவமால்காப்பேர் ஆகிய ஊராட்சிகளில் நடந்த வாக்காளர்களுக்கான சரிபார்ப்பு பணியை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், பார்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறியதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுரையின்படி, கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது.

தொடர்ந்து கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பாக ஆர்.டி.ஓ., அலுவலகம், சப் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் ஓட்டுச்சாவடி மையங்களில் வரும் 18ம் தேதி வரை அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், 2002ம் ஆண்டு வாக்களர் பட்டியலில் வம்சாவழி சார்பில் இல்லாத வாக்காளர்களுக்கு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, வானுார் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் வித்யாதரன், கண்டமங்கலம் பி.டி.ஓ.,க்கள் சண்முகம், மணிவண்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us