/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அகில இந்திய தொழில் தேர்வு தனித்தேர்வர்களுக்கு அழைப்பு
/
அகில இந்திய தொழில் தேர்வு தனித்தேர்வர்களுக்கு அழைப்பு
அகில இந்திய தொழில் தேர்வு தனித்தேர்வர்களுக்கு அழைப்பு
அகில இந்திய தொழில் தேர்வு தனித்தேர்வர்களுக்கு அழைப்பு
ADDED : அக் 05, 2025 11:02 PM
விழுப்புரம்: அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், அகில இந்திய தொழில்தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க, தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இந்த விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, தேர்வு கட்டணம் ரூ.200 செலுத்தி, பூர்த்தி செய்ததை உரிய ஆவணங்களோடு மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்பிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலை தேர்வுகள் கருத்தியல் தேர்வு வரும் நவ., 4ம் தேதியும், செய்முறை தேர்வு வரும் நவ., 5ம் தேதியும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. இதில், தனித்தேர்வர்கள் வரும் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதன் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. இது சம்பந்தமாக மேலும் விபரங்கள் பெற விரும்புவோர், உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம், தொலைபேசி 04146 294989, மண்டல பயிற்சி இணை இயக்குநர், விழுப்புரம், தொலைபேசி 04146 290673 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.