/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதைப் பண்ணை அமைத்து பயன்பெற பட்டியலின விவசாயிகளுக்கு அழைப்பு
/
விதைப் பண்ணை அமைத்து பயன்பெற பட்டியலின விவசாயிகளுக்கு அழைப்பு
விதைப் பண்ணை அமைத்து பயன்பெற பட்டியலின விவசாயிகளுக்கு அழைப்பு
விதைப் பண்ணை அமைத்து பயன்பெற பட்டியலின விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : செப் 19, 2024 11:20 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் விதைப் பண்ணை அமைத்து பயன்பெற வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சீனிவாசன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், சம்பா மற்றும் நவரை பருவத்தில் சராசரியாக 95 ஆயிரம் எக்டர் பரப்பில் நெற்பயிரும், ராபி பருவத்தில் 3,500 எக்டர் பரப்பில் சிறுதானியங்கள், 50 ஆயிரத்து 600 எக்டர் பரப்பில் பயறுவகைகள், 15 ஆயிரத்து 500 எக்டர் பரப்பில் எண்ணெய்வித்து பயிர்களும் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சாகுபடி செய்யப்படும் பயிர்களில், கூடுதல் லாபம் பெற வேளாண் துறையில் விதைப் பண்ணையாக பதிவு செய்து, களப்பணியாளர்களின் பரிந்துரைப்படி உயர் தொழில் நுட்பங்களை பின்பற்றியும் மற்றும் விதை சான்றளிப்புத் துறையின் வழிகாட்டுதலின் படியும் சாகுபடி செய்ய வேண்டும்.
உயர் தொழில் நுட்பங்களை பின்பற்றி சாகுபடி செய்யும்போது, சராசரியை விட கூடுதல் மகசூல் பெறுவது மட்டுமின்றி, விதைப்பண்ணை மூலம் பெறப்படும் விதைகளுக்கு, சந்தை விலையை விட அரசின் டான்சிடா திட்டத்தின் மூலம் கூடுதலான கொள்முதல் விலை பெறமுடியும்.
நடப்பாண்டில், விதைப் பண்ணை சாகுபடியை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளிடையே ஊக்குவிக்கும் வகையில், தனித்தனியாக இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒரு விவசாயி 5 ஏக்கர் வரை விதைப் பண்ணை அமைக்க பதிவு செய்யலாம்.
எனவே, நடப்பு பருவத்தில் நெல், சிறுதானியங்கள் பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துகள் பயிர்களில் விதைப்பண்ணை அமைத்து சாகுபடி செய்ய விரும்பும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள், தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.