/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் வீதியில் தார் சாலை போடப்படுமா?
/
திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் வீதியில் தார் சாலை போடப்படுமா?
திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் வீதியில் தார் சாலை போடப்படுமா?
திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் வீதியில் தார் சாலை போடப்படுமா?
ADDED : நவ 01, 2024 11:30 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த ஈஸ்வரன் கோவில் தெருவில் புதிய தார் சாலை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நகராட்சி சார்பில், 265 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது.
பணிகள் முடிந்த நகரின் முக்கிய போக்குவரத்து சாலைகளான நேரு வீதி, காமாட்சியம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜி தெரு ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் புதிய சாலைகள் போடவில்லை.
இதில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கடையடைப்பு போராட்டம் காரணமாக, சமீபத்தில் நேரு வீதியில் மட்டும் தார் சாலை போடப்பட்டது.
சாலை போடப்படாமல் உள்ள ராஜாஜி சாலை, ஈஸ்வரன் கோவில் தெருவில் பழுதடைந்த சாலைகளிலிருந்து புழுதி பறப்பது குறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து படத்துடன் செய்தி வெளியானது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜாஜி தெருவில் புதிய தார் சாலை போடப்பட்டது.
இதேபோல் ஈஸ்வரன் கோவில் தெருவிலும் தார் சாலை போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.