ADDED : பிப் 19, 2024 05:20 AM

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு மையத்திற்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் சத்துணவு மையம் செயல்பாடுகள் குறித்து கடந்த ஓராண்டாக தரச்சான்று அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து கண்காணித்து வந்தனர்.
தற்போது இப்பள்ளியின் சத்துணவு மையம், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்க தேர்வு செய்யப்பட்டது.
தரச் சான்றினை கலெக்டர் பழனி , சத்துணவு மைய பொறுப்பாளர் விஜயா, ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் ஆகியோரிடம் வழங்கினார்.
தரச்சான்று நிறுவன மேலாளர் கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இந்திராதேவி, பி.டி.ஓ., சுமதி, துணை பி.டி.ஓ., ேஹமலதா, பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி, ஊராட்சி செயலாளர் சண்முகம் உடனிருந்தனர்.
