/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பாளர்களுக்கு இறுதி நோட்டீஸ் வழங்கல்
/
ஆக்கிரமிப்பாளர்களுக்கு இறுதி நோட்டீஸ் வழங்கல்
ADDED : ஜூலை 30, 2025 11:24 PM
திண்டிவனம்: தீர்த்தக்குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஆக., 4 ம் தேதிக்குள் காலி செய்ய இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
திண்டிவனம், திந்திரிணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தக்குளத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதன் பேரில் குளத்தை சுற்றியுள்ள வீடுகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதன் பேரில் கடந்த நவம்பரில் நகராட்சி சார்பில் வீடுகளை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த, 25 ம் தேதி, நகராட்சி ஆணையாளர் குமரன், தாசில்தார் யுவராஜ் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கிய போது, பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி, எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, திண்டிவனம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் திலகவதி, வி.ஏ.ஓ., சிற்றரசு ஆகியோர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இறுதி நோட்டீஸை, வீடு வீடாக வழங்கினர். அதில் வரும் ஆக., 4 ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் படி நேற்று மட்டும் 46 வீடுகளுக்கு நோட்டீஸ் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கு இன்று வழங்கப்பட உள்ளது.