/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இருளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
/
இருளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கல்
ADDED : டிச 22, 2024 06:58 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் இருளர் பழங்குடியின மக்கள் 48 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கலெக்டர் வழங்கினார்.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் பழனி ஆவடியார் பட்டு பகுதியில் வசிக்கும் இருளர் குடும்பத்தினர் 48 பேருக்கு 39 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் 5 நபர்களுக்கு கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட ஆணை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார்.
கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் யுவராஜ்,பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்திரன், குலோத்துங்கன், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி, நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி, சங்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், சுதா, வெண்ணிலா, மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, தனி தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன் வி.ஏ.ஓ.,க்கள் ராஜா, ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.