/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்
/
கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கல்
ADDED : மே 29, 2025 11:27 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை யை எம்.எல்.ஏ., வழங்கினார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணை சேர்மன் ஜீவிதா ரவி , பி.டி .ஓ., க்கள் சையது முகமது நாராயணன் முன்னிலை வகித்தனர். மேலாளர் டேவிட் குணசீலன் வரவேற்றார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா ஒன்றியத்தைச் சேர்ந்த 58 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே மூன்று லட்சம் மதிப்பில் கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டும் ஆணையையும், 51 ஊராட்சிகளுக்கு 264 தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கியும், 94 கிராமங்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கியும் பேசினார்.
பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி,மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி ,ரவிதுரை ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.