/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
ADDED : அக் 27, 2025 12:20 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கனவு இல்ல திட்ட வீடு கட்டும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சியில் தேவதானம்பேட்டை, நரசிங்கராயன்பேட்டை, பொன்பத்தி, மீனம்பூர் ஊராட்சிகளைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு கனவு இல்ல திட்டத்தில் தலா 2.70 லட்சம் ரூபாய் மதிப்பில் தொகுப்பு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கி னார்.
பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கினார்.
பி.டி.ஓ. நடராஜன், துணை பி.டி.ஓ., சுந்தரபாண்டியன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதிகள் ரவி, அய்யாதுரை, ஒன்றிய தலைவர் வாசு, இளைஞரணி பழனி, கோகுல் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

