ADDED : ஜூன் 03, 2025 12:21 AM

திருவெண்ணெய்நல்லுார்: அ.தி.மு.க., மாவட்ட ஜெ., பேரவை சார்பில் திண்ணைப் பிரசாரம் மற்றும் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். நகர பேரவை செயலாளர் நித்தியானந்தம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நகர பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அ.தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணைப் பிரசாரம் செய்தனர். ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, இளங்கோவன், பழனி, சேகர், நகர செயலாளர்கள் சுப்பு, ராஜ்குமார், மாவட்ட நிர்வாகிகள் உமாசங்கர், கிருஷ்ணமூர்த்தி, முருகதாஸ், உதயகுமார், நகர அவைத் தலைவர் துரை, பொருளாளர் குப்புசாமி, பாசறை தலைவர் வெங்கடாஜலபதி, இளையராஜா, பேரவை நிர்வாகிகள் பலராமன், சண்முகம், சுபாஷ், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பேரவை துணைச் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.