ADDED : ஏப் 23, 2025 04:15 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் தி.மு.க., தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், அறிவழகன், தண்டபாணி, டேவிட் குணசீலன், செல்வகுமார் சிறப்புரையாற்றினர். உயர்மட்டக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினார்.
தமிழக முதல்வரின், தேர்தல் கால வாக்குறுதிகளான, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணையை கைவிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

