/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
/
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
ADDED : டிச 14, 2025 06:05 AM

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
விழுப்புரத்தில், நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயானந்தம், கணேஷ், சிவக்குமார் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், டேவிட் குணசீலன் முன்னிலை வகித்தனர். உயர்மட்ட குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் துவக்க உரையாற்றினார். மாநில நிர்வாகிகள் தியாகராஜன், சங்கரலிங்கம், சுந்தரமூர்த்தி, சிவராமன் சிறப்புரையாற்றினர். ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோபிரபு வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில், தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், தொகுப்பூதிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்ற மாநில அமைப்பு செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தனர். பல்வேறு சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், ரஹீம், செல்வராஜ் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர்.
பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

