ADDED : ஜன 06, 2025 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த கெடார் அருகே உள்ள செல் லங்குப்பத்தை சேர்ந்தவர் சிவஞானம், 47 கொத்தனார்.
இவர் நேற்று முன்தினம் தனது பாட்டி தனலட்சுமி யுடன், 70; பைக்கில் முண்டியம் பாக்கம் மருத்துவ மனைக்கு சென்று வீடு திரும்பினார். கெடார் அடுத்த சூரப்பட்டு பெட்ரோல் பங்க் அருகே வரும் போது எதிர் திசையில் பைக்கில் வந்த மர்ம ஆசாமி தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒன்னரை சரவன் ஜெயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
புகாரின் பேரில் கெடார் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.