/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
ADDED : மார் 24, 2025 04:47 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, தமிழ் ஆசிரியர் கழகம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வணிகவரி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுசெயலாளர் சங்கரலிங்கம், சிறப்புரையாற்றினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர்கள் கணேஷ், அறிவழகன், டேவிட் குணசீலன், செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் கழகம் செல்லையா, அரசு பணியாளர் சங்கம் குமரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில், முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான, கடந்த 2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைத்துள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கள்ளக்குறிச்சி
கச்சேரி சாலையில் நடந்த உண்ணாவிர போராட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் செல்வராஜ், லட்சுமிபதி, மகாலிங்கம், ரஹீம் விளக்கவுரையாற்றினர்.
எல்.ஆனந்தகிருஷ்ணன், எஸ்.கே.ஆனந்தகிருஷ்ணன், அண்ணாதுரை, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ேஷக் ஜாகிர்உசேன் நன்றி கூறினார்.